ADDED : டிச 30, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி.,நாடார் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
கல்லுாரி செயலாளர் மகேஷ்பாபு விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றார். வி.வி.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி முதல்வர் சிந்தானா மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
கல்லுாரி தலைவர் சம்பத்குமார், துணைத் தலைவர்கள் ராமசாமி, டெய்சி ராணி, பொருளாளர் குமரன், செந்திக் குமார நாடார் கல்லுாரி முதல்வர் சாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கண்ணன் செய்திருந்தார்.

