ADDED : பிப் 09, 2026 05:22 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி கலை , அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார்.
சாத்துார் எஸ். ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்வியியல் கல்லுாரி ஆண்டு அறிக்கையினை முதல்வர் கண்ணன் வாசித்தார். கலை கல்லுாரி ஆண்டு அறிக்கையினை முதல்வர் ராம்ஜெயந்தி வாசித்தார். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
