ADDED : ஏப் 04, 2026 07:44 PM

விருதுநகர்:விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் 24வது பட்டமளிப்பு விழா தலைவர் முரளிதரன் தலைமை வகித்து நடத்தினார். கல்லுாரி செயலாளர் மகேஷ்குமார் வரவேற்றார். இதில் கல்லுாரி முதல்வர், நிர்வாக உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் பிரசாத் கிருஷ்ணா பேசியதாவது:
‛கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு' எவ்வளவு தான் படித்து, எத்தனை சாதனைகளை படைத்திருந்தாலும் இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
இன்று நாம் வாங்கும் இந்த பட்டம் அதில் ஒரு சிறு துளி மட்டுமே. கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல நமது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், அந்நியர்கள், இயற்கை, விலங்கினங்கள், பறவைகள் என நம்மை சுற்றி இருக்கும் அனைவருமே நமக்கு தினமும் பாடத்தை கற்பித்து கொண்டே இருக்கின்றனர், என்றார்.
