நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் ரிலவன்ஸ் டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நடந்தது.
இதில் முதலாம் ஆண்டு கணினி, தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை செயல்திட்ட அதிகாரி டினோ மண்டெல்லா, தற்போதைய அமெரிக்க தமிழ் தொழில்நுட்பச் சந்தை, வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள், நவீன தொழில் நுட்ப வல்லுனர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் திறன்கள், நுண்ணறிவு குறித்த அறிவுரைகளை வழங்கினார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கல்லுாரியின் செயலாளர் மகேஷ் குமார், முதல்வர் செந்தில் வாழ்த்தினர்.

