/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி
/
படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி
ADDED : ஜூலை 03, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனி சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ஆல்பர்ட் 18. இவர் சாத்துாரில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் 2ம்ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லுாரி முடிந்து சாத்துாரில் இருந்து சிவகாசி செல்லும் தனியார் பஸ் முன்பக்க படியில் தொங்கியபடி வந்துள்ளார். அனுப்பன்குளம் அருகில் பஸ் வரும்போது நிலை தடுமாறு படியில் இருந்து கீழே விழுந்த ஆல்பர்ட் மீது பஸ் ஏறி இறங்கியதில் இறந்தார்.
கிழக்கு போலீசார் பஸ் டிரைவர் மோகன்ராஜை 47, கைது செய்து விசாரிக்கின்றனர்.