தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

 சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

 சாதனை மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மே 24, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

மாநில அளவில் மாணவி ஹரிப்பிரியா 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடமும், மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பள்ளியில் முதலிடமும் பெற்றிருந்தார். மாணவர் முத்து கார்த்திகேயன் 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி தர்ஷினி 492 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றனர்.

மாணவி ஹரிப்பிரியா மூன்று பாடங்களிலும், 3 மாணவர்கள் கணிதத்திலும், அறிவியலில் 9 மாணவர்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவியும் சென்டம் பெற்றிருந்தனர். சாதனை மாணவர்களை பள்ளி தலைவர் கண்ணன், தாளாளர் கிருஷ்ணவேணி, நிர்வாக குழு உறுப்பினர் கோகுல் கண்ணன், திவ்யா பாராட்டினர்.

பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் மாணவர்களை பாராட்டி புத்தகம் பரிசு வழங்கினார். முதல்வர் சுதா, நிர்வாக அலுவலர்கள் கண்ணன், கணேசன் ஆசிரியர்கள் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us