ADDED : பிப் 03, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் திருவிழா நடந்தது.
கல்லூரி செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். சேர்மன் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் முதன்மை தொழிலாளர் நல ஆணையாளர் முத்துமாணிக்கம் பேசினார். பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் உலகவியல் சட்டங்கள் பற்றி விளக்கினார்.
மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து செயலர் விக்னேஷ், அருண், துணை முதல்வர் பவுர்ணா கலந்து கொண்டனர். பேராசிரியை விக்னேஸ்வரி நன்றி கூறினார்.
