/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமுதாய கூடங்கள், குடிநீர் தொட்டி திறப்பு
/
சமுதாய கூடங்கள், குடிநீர் தொட்டி திறப்பு
ADDED : ஜூன் 18, 2025 04:03 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சமுதாய கூடங்கள், குடிநீர் தொட்டி கட்டட பணிகளில் பங்கேற்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிராமத்தில் 9 லட்சத்திலும், பெரியநாயகிபுரத்தில் 30 லட்சத்திலும், போடம்பட்டியில் 30 லட்சத்திலும் சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
குருந்தமடத்தில் 18.42 லட்சத்தில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும், திருவிருந்தாள்புரத்தில் 22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலைத் தொட்டியையும் திறந்து வைத்தார். சுக்கிலநத்தம் கிராமத்தில் 10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், பொன்ராஜ், சுக்கிலநத்தம் முன்னாள் ஊராட்சி தலைவர் சோபனாதேவி, ஒன்றிய கவுன்சிலர் வாழவந்தராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.