ADDED : ஏப் 14, 2026 10:07 PM
சிவகாசி: வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் கழிவுநீர் கலப்பதாலும் தண்ணீரின் நிறம் மாறி விவசாயத்திற்கு பயன்படவில்லை என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வைப்பாற்றின் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தவிர வைப்பாறு செல்லும் வழியில் உள்ள சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் வைப்பாற்றில் வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றது. மேலும் வெம்பக்கோட்டை பகுதியில் குடியிருப்பு கடைகளில் கழிவுகள் நேரடியாக வைப்பாற்றில் கலக்கின்றது. இதனால் தண்ணீர் நிறம் மாறி வைப்பாறு பாழாகின்றது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது.
