ADDED : டிச 09, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பனைக்குடி, மறைக்குளம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது டூவீலரில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்து சோதனை செய்ததில் 100 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.
அ.முக்குளத்தை சேர்ந்த முத்தையா என்பதும், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது. நுாறு மது பாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.