ADDED : ஜூலை 17, 2025 11:46 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நகர காங்., சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து அவதுாறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.,யை கண்டித்து காங்., நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் பால்பாண்டி, ராஜ்குமார், ஐ.என்.டி.யு.சி., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துகுமார், வட்டாரத் தலைவர்கள், இளைஞர் காங்., நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
