ADDED : ஜன 31, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் படந்தால் ஊராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து படந்தால் ஊராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் பேசினார். வட்டார தலைவர்கள் மாரிமுத்து, பொறுப்பாளர் கார்த்திக், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
