ADDED : ஆக 07, 2025 11:18 PM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துாரில் நகர வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கார்த்திக், தொகுதி துணைத் தலைவர் சதாம் உசேன், சட்டசபை தொகுதி உழைப்பாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் கண்மாய், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
