UPDATED : அக் 08, 2026 07:58 PM
ADDED : அக் 08, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: தேர்தல் தலைமை ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை கைது செய்ததை கண்டித்தும், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,ஐ கண்டித்தும் விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சிவகுருநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் பால்பாண்டி, ராஜ்குமார், வட்டார காங். தலைவர் சீனிவாசன், வழக்கறிஞர் சீனிவாசன் பங்கேற்றனர். அகில இந்திய காங். கமிட்டி நேற்றைய நாளை ஜனநாயக கருப்பு நாளாக அறிவித்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.
