/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் கிடப்பில் ரூ.40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணிகள்

ADDED : செப் 09, 2025 03:39 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி முஸ்லிம் தைக்கா தெருவில் ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி 37 வது வார்டு முஸ்லிம் தைக்காத் தெரு பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மண்டபம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ . 40 லட்சத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டும் பணி துவங்கியது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மூன்று மாதமாக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வருவது தாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக கட்டுமான பணிகளை துவக்கி சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.