/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் கட்டடப்பணி பாதியில் நிற்குது
/
பஸ்ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் கட்டடப்பணி பாதியில் நிற்குது
பஸ்ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் கட்டடப்பணி பாதியில் நிற்குது
பஸ்ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் கட்டடப்பணி பாதியில் நிற்குது
ADDED : ஏப் 22, 2025 05:36 AM

சிவகாசி சாத்துார் ரோட்டில் பஸ் ஸ்டாண்டு அருகே வருவாய்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் நகராட்சி நிர்வாக துறைக்கு மாற்றப்பட்டு, 1.75 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகமும், 0.75 ஏக்கர் நிலத்தில் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. புதிய அலுவலகம் கட்ட ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ.5 கோடி வணிக வளாகம் கட்டுவதற்கு 2023 ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
வணிக வளாகத்திற்கு ரூ.2.5 கோடி மாநகராட்சி நிதியிலும், மீதமுள்ள ரூ.2.5 கோடி கடைகளுக்கான முன்பதிவு தொகை மூலம் திரட்டி கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. வணிக வளாகம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கட்டப்படுகிறது. 50 சதவீதத்திற்கும் மேலான பணிகள் முடிந்த நிலையில், கடைகளை முன்பதிவு செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், நிதி இல்லாமல் ஒரு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் வணிக வளாகத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி சாத்துார் ரோட்டில் முன்புறம் அலுவலகத்தை கட்டிவிட்டு, வணிக வளாகத்தை பின்புறம் கட்டுவதால் வியாபாரிகள் கடைகளை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டாததால் பங்களிப்பு நிதியின்றி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னைக்கு முடிவு கண்டு விரைவில் கட்டுமான பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.