/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 10, 2025 12:50 AM
சிவகாசி: சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததால் வர்த்தக சங்கத்தினருடன் கமிஷனர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
சிவகாசியில் கமிஷனராக சரவணன் பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார். அதன்படி நான்கு நாட்களுக்கு முன்பு சிவகாசி ரத வீதிகள், என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் கமிஷனர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இரண்டாவது நாளிலேயே ரத வீதிகளில் மீண்டும் அதே நபர்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனைக் கண்ட கமிஷனர் அவர்களிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிவகாசி வர்த்தக சங்கத்தினருடன்மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வர்த்தக சங்கத்தினர தங்களது கருத்துக்களை கூறினர்.
கமிஷனர் கூறுகையில், மக்களுக்கு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது. போலீசார் உடன் இணைந்து கடைகள் வைப்பதற்கு வரையறை செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.