/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
/
பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 14, 2025 03:31 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் கட்டுப்படுத்துவது தொடர்பான மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கமிஷனர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது, மக்கள், பதிவு பெற்ற பொறியாளர்களிடம் வரைபட அனுமதி தொடர்பாக அணுகும் போது சரியான வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவிக்க வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களால் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளால் காலதாமதம் மற்றும் பொருள் விரயம் போன்றவற்றை தவிர்க்க அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் படி கட்டுமான பணிகளை செய்ய வேண்டும், என்றார். மாநகர திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.