நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் சென்னை சமூகப்பணி கல்லுாரி சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், தமிழ்நாடு புதரையர் கூட்டமைப்பு சார்பில் புதிரை வண்ணார் சமூக பொருளாதார நிலை குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் சாய் பாலாஜி தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜா செந்துார் பாண்டி வரவேற்றனர்.
தமிழ்நாடு புத்தர் களம் சுப்பையா பாண்டியன், சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் இயக்குனர் பவணந்தி வேம்புலு, சென்னை மாநிலக் கல்லுாரி வரலாற்று துறை இணை பேராசிரியர் ரகுபதி, புதிரை வண்ணார் நலவாரிய உறுப்பினர் மனோகரன் பேசினர்.
புத்தர் களம் மாநில செயலாளர் மோகன் குமார் நன்றி கூறினார்.