ADDED : செப் 27, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் குயின்ஸ் ஆலோசனைக் கூட்டம் தலைவர் உமாதேவி தலைமையில், துணைத் தலைவர் கவுரி முன்னிலையில் நடந்தது.
பொருளாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இன்டர்நேஷனல் மண்டல தலைவர் அழகர்சாமி பேசினார். கூட்டத்தில் வரும் அக். 11ல் காரியாபட்டியில் மாணவர்களின் பங்கேற்புடன் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் வாசுகி நன்றி கூறினார். நிர்வாகிகள் ப்ரீத்தி, மஞ்சுளா, கனி, அபி, ஜெயலட்சுமி, ஜோதி கலந்து கொண்டனர்.
