/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை
/
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை
ADDED : அக் 14, 2024 04:10 AM

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட துவங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி பிளவக்கல் பெரியார் அணையில் 38.8 மில்லி மீட்டர் மழை பதிவானதில் அணைக்கு வினாடிக்கு 70.91 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 24.28 உயரமாக இருந்தது. இதுபோல் கோவிலாறு அணையில் 65.2 மில்லி மீட்டர் மழை பதிவானதில் அணைக்கு வினாடிக்கு 27.28 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 24.61 அடி உயரமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை வரை 8:00 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 4 மில்லி மீட்டர் மழை பெய்து அணைக்கு வினாடிக்கு 14. 55 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 24.61 அடியாக உயர்ந்தது.
இதேபோல் கோவிலாறு அணையில் 5.4 மில்லி மீட்டர் மழை பதிவானதில் அணைக்கு வினாடிக்கு 2.63 கன அடி தண்ணீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் 24.67 ஆக உயர்ந்தது. நேற்றும் மாலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வத்திராயிருப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டாற்றில் நீர்வரத்து
திருச்சுழியில் தொடர்ந்து மழை பெய்தது இதனால் குண்டாற்றில் நீர் வரத்து துவங்கி உள்ளது. ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகமாக கூடும் என்பதால் சிறுவர்கள், இளைஞர்கள், மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவும் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என திருச்சுழி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவான மழையளவு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை திருச்சுழியில் 48.10(மில்லி மீட்டர்), ராஜபாளையம் 7, காரியாப்பட்டி 36.20, ஸ்ரீவில்லிப்புத்துார் 6.10, விருதுநகர் 39.80, சாத்துார் 32, பிளவக்கல் 4, வத்திராயிருப்பு 7.20, கோவிந்தகுளம் 103.80, வெம்பக்கோட்டை 9.50, அருப்புக்கோட்டை 44 என நேற்று காலை 8:00 மணி வரை மழையளவு பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக சிவகாசியில் 122.30 மி.மீ., மழை பெய்துள்ளது.