ADDED : பிப் 28, 2026 06:42 AM

சிவகாசி:சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலத்தில் விபத்தினை தடுப்பதற்காக நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் 2025 நவ.ல் பயன்பாட்டிற்கு வந்தது. 700 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலம் உள்ள இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாலத்தில் வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயற்சிக்கையில் எதிரே வந்த லோடு ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தில் விபத்தினை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். , உதவி கோட்ட பொறியாளர்கள் தர்மராஜ், முத்து முனி குமாரி, உதவி பொறியாளர் சங்கீதா, டிராபிக் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், டிராபிக் எஸ்.ஐ., ஆனந்த் ஆகியோர் பாலத்தில் ஆய்வு செய்தனர். இதில் விபத்தினை தடுக்கும் வகையில் பாலத்தின் நடுவே சிறிய தடுப்பு வைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டது.
