தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வரையறுக்கப்பட்ட காலமுறை வழங்காத வரை தொடர் காத்திருப்பு போராட்டம்

 வரையறுக்கப்பட்ட காலமுறை வழங்காத வரை தொடர் காத்திருப்பு போராட்டம்

 வரையறுக்கப்பட்ட காலமுறை வழங்காத வரை தொடர் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 06, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவி யாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறிய தாவது:

நான்காம் நிலைக்கு இணையான டி கிரேடு ஊதியம் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு 25 சதவீத கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு ஆணை எண் 20ல் திருத்தம் செய்து கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கேற்றார் போல் தகுந்த பணியை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர் பணியை துணை கிராம நிர்வாக அலுவலர் என பதவியின் தரம் உயர்த்திடவும், கூடுதல் பணி பொறுப்புகளை அளிக்கவும் வேண்டும்.

கிராம உதவியாளர் களுக்கு பதவி உயர்வில் 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அலு வலராக பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுக்கு பணிக் காலத்தை முழுமை யாக சேர்த்து ஓய் வூதியம், பணிக்கொடை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

கிராம உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கும், பணியில் இருந்து இறந்து விட்ட கிராம உதவி யாளர்களுக்கும் சி.பி.எஸ்.,ல் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

முக்கிய கோரிக்கையான நான்காம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் பெறுவது பற்றி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும் வரை நேற்று(பிப். 5) முதல் அனைத்து கலெக்டர் அலுவலகங்களின் முன்பும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us