ADDED : ஜூலை 15, 2025 03:09 AM

விருதுநகர்: விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பணி கோரி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள், கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு:
3 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். பாலியல் தொந்தரவு, ஜாதி ரீதியான பாகுபாடுகளை கடந்தும் பணிபுரிந்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன் 120 பேரை பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். 3 மாதங்களாக அலைகிேறாம். வாழ்வாதாரம் இல்லாமல் பரிதவிக்கிறோம். குழந்தைகள் பட்டினியில் கிடக்கின்றனர், என கேட்டுள்ளனர்.
இந்நிலையில் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்தால் தான் செல்வோம். எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிடில் இங்கிருந்து செல்லமாட்டோம், என்றனர். போலீசார் சமரசத்தையடுத்து கலெக்டரிடம் மனு கொடுத்து சென்றனர்.