/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளைவுகளில் குவி கண்ணாடி-- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
வளைவுகளில் குவி கண்ணாடி-- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
வளைவுகளில் குவி கண்ணாடி-- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
வளைவுகளில் குவி கண்ணாடி-- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2024 05:13 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துக்களை தடுக்க முக்கிய சந்திப்பு பகுதிகளில் குவி கண்ணாடி பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரை வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. பஞ்சு மார்க்கெட்டில் இருந்து சொக்கர் கோயில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையிலும் திடீர் பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நுழைவு பகுதிகளாக உள்ள டி.பி மில்ஸ் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, காந்தி கலை மன்றம் போன்ற முச்சந்தி, ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ளிட்ட பகுதிகளில் குவி லென்ஸ் எனும் துாரத்தில் வாகனங்கள வருவதை கண்டறியும் கண்ணாடிகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.
ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன் செயல்பாட்டில் இருந்த குவி கண்ணாடிகள் குறிப்பிட்ட பலனை தந்த நிலையில் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்திலாவது இதற்கான நடவடிக்கை இருக்கும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்த நிலையில் விபத்துக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சியினர் முன்வந்து செயல்படுத்த வேண்டும்.

