
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன் பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் கே.கே.பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வி குழுமம் கவுரவ நிர்வாகி கி. பொன்ராஜ் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர்கள் கண்ணன், ராம் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தனர்.
மதுரை பல்கலைக் கழகம் டீன் கண்ணதாசன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவது கல்வி மட்டுமே. பெண் கல்வியே குடும்பத்தின் ஒளிவிளக்கு. ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு தேசமே கல்வி கற்றதற்கு சமம்.
இன்றைய இணையதள வசதி மூலம் மாணவர்கள் அதிகம் கற்க தொடங்கி விட்டனர். எனவே ஆசிரியர்கள் அன்றாட நிகழ்வுகளை அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

