/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம்: மாவட்ட நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் தகவல்

ADDED : ஜூலை 11, 2025 02:59 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடியாக விற்கலாம்,என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் 14 ஆயிரத்து 028 ஹெக்டேர் பரப்பில் பருத்தி ராபி, கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர், வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணுதேசிய வேளாண் சந்தை மூலம் மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடக்கிறது.பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து இநாம் திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.
தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு ஈரப்பதம் 8 சதவீதத்திற்கு மிகாமலும், பருத்தி இழை 29.0 மில்லிக்கு கூடுதலாகவும் இருக்க வேண்டும்.
விற்பனை கூட கண்காணிப்பாளர்கள் விருதுநகர் 93600 87561, ராஜபாளையம் 82484 05989, சாத்துார் 90033 56172, அருப்புக்கோட்டை 79045 37699 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.