/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது
/
கிடைமாடுகள் திருட்டு: நான்கு பேர் கைது
ADDED : ஜன 21, 2026 05:44 AM
தளவாய்புரம்: சேத்துாரை சேர்ந்த லட்சுமி நாராயணன், பாண்டியன் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் பாதை நச்சாடை பேரி கண்மாய் அருகே 250க்கும் அதிகமான கிடை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
வழக்கம்போல் மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற கிடை மாடுகளில் இரண்டு காணவில்லை.
இது குறித்து கிடை மாடு வளர்ப்போர் அக்கம் பக்கம் தேடி வந்ததில் லோடு வேனில் சிலர் இறைச்சிக்கு மாடுகளை கடத்தி செல்வது தெரிந்து அப்பகுதியில் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
இதில் மாடுகளுடன் கடத்திச் சென்ற சேத்துார் காமராஜர் நகரை சேர்ந்த இளையராஜா 35, மாடசாமி 35, ஜீவா நகரை சேர்ந்த சலாமா ஒலியுல்லா 30, லோடு வேன் டிரைவர் ரியாஸ்கான் 26, ஆகிய நான்கு பேரை தளவாய்புரம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

