ADDED : ஏப் 11, 2026 04:04 AM

சிவகாசி: விருதுநகர்மாவட்டம் சிவகாசி அருகே புலிப்பாறை பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து இருப்பு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை சேதமடைந்தது.
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் . இவருக்கு புலிப்பாறை பட்டியில் சென்னை உரிமம் பெற்ற வரதன் பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு நேற்று இரவு 9:00 மணியளவில் மருந்து இருப்பு வைக்கும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
அறை சேதமடைந்தது. தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ மட்டும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்ததால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
மருந்து இருப்பு அறையில் வேதியியல் மாற்றத்தால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
