நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் இணை பாடத்திட்ட 'வின்ட்ரா- 25' விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். பொறியியல், மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், சட்டம், கலை அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த 7013 மாணவர்கள் 78 போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களை துணைத் தலைவர் சசி ஆனந்த் வழங்கினார். டீன் சிவக்குமார், விஜயகுமார் பேசினர். விழாவில் இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஜெயபிரபா நன்றி கூறினார்.

