/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
/
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : நவ 10, 2025 12:44 AM

விருதுநகர்: விருதுநகர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால் சோலை வனமாக இருந்த வளாகம் தற்போது வெறுமனே காட்சி அளிக்கிறது.
விருதுநகர் -- மதுரை ரோட்டில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
இதன் வளாகத்தில் வில்வம், வேப்பமரம் உள்பட பல்வேறு வகையான மரங்கள் நடவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பராமரித்து வளர்க்கப்பட்டு வந்தது.
மேலும் வளாகம் முழுவதும் காலி நிலங்கள் அதிகமாக இருப்பதால் கூடுதல் மரங்கள் நடவு செய்யும் அளவிற்கு இடவசதி இருக்கிறது.
ஆனால் தற்போது விற்பனை கூடத்தில் பரா மரிக்கப்பட்டு வந்த பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
மரங்களை வெட்டுவதற்கு முன் வனத்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு வனப்பரப்பை அதிகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் வேளாண் விற்பனை கூடத்தில் பல ஆண்டு களாக பராமரிக்கப்பட்டு வந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விற்பனைக்குழு செயலாளர் வேலுச்சாமி கூறியதாவது: விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மரக்கிளைகள் வெட்டப்பட்டது.
வளாகத்தில் தோட்டத்தில் தேவையற்ற மரங்களை அகற்றி விட்டு புதிய மரங்களை நடவு செய்யும் பணி துவக்கப் படவுள்ளது. வெட்டப்பட்ட மரங்கள் ஏலம் விடப்பட்டு அதற்கான தொகை விற்பனைக்குழு கணக்கில் வரவு வைக்கப்படும், என்றார்.

