/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினமும் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

ADDED : ஏப் 04, 2025 02:45 AM
வத்திராயிருப்பு:உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி நேற்று முதல் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இக்கோயிலில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டு பல நாட்களான நிலையில் தினமும் தரிசனம் செய்வது எப்போது என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.
அதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு காலை 10:00 மணிக்கு மூடப்பட்டது. திடீர் அறிவிப்பால் பக்தர்கள் நேற்று வரவில்லை. உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவின்படி தினமும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.