/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே பாலத்தில் தினமும் விபத்து அலட்சியத்தில் நெடுஞ்சாலைத்துறை
/
ரயில்வே பாலத்தில் தினமும் விபத்து அலட்சியத்தில் நெடுஞ்சாலைத்துறை
ரயில்வே பாலத்தில் தினமும் விபத்து அலட்சியத்தில் நெடுஞ்சாலைத்துறை
ரயில்வே பாலத்தில் தினமும் விபத்து அலட்சியத்தில் நெடுஞ்சாலைத்துறை
ADDED : அக் 05, 2024 03:52 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியில் ஒரு மாதமாகியும் சாலை பெயர்ந்து ஜல்லி கற்கள் சிதறியுள்ளதை நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் தினமும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் சங்கரன் கோயில் முக்கிலிருந்து சத்திரப்பட்டி ரோடு செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. கனரக லாரிகள், பஸ், டூவீலர்கள் என எந்நேரம் அதிக போக்குவரத்து இருக்கும்.
ரயில்வே மேம்பால தொடக்கத்தில் சாலையின் சேதத்தை சரி செய்ய தோண்டப்பட்டுள்ள பள்ளம் முழுமையாக சரி செய்யாமல் அமைத்துள்ளதுடன் அதிலிருந்து ஜல்லி கற்கள் வெளியேறி வருவதால் வாகன ஓட்டிகள் திரும்பும் போது சறுக்கி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கணேசன்: தினமும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவதும் துாக்கி ஓரமாக அமர வைப்பது, ஆம்புலன்ஸ் அழைப்பது என சிக்கல் தொடர்கிறது.
ஒரு மாதத்திற்கு அதிகமாகியும் ஜல்லி கற்கள் சிதறி உள்ளதை சரி செய்யாமலும் சாலை சேதத்தை சீரமைக்காமலும் உள்ளதால் பாதிப்பு தொடர்கிறது.