தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தெற்காறு ஆறு துார் வாரும் பணி துவக்கம்

தெற்காறு ஆறு துார் வாரும் பணி துவக்கம்

தெற்காறு ஆறு துார் வாரும் பணி துவக்கம்


UPDATED : நவ 26, 2026 04:32 PM

ADDED : நவ 26, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:32 PM ADDED : நவ 26, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி டி.கடம்பங்குளம் அருகே தெற்காறு ஆற்றைத் தூர்வாரும் பணியை கலெக்டர் ஷரண்யா அறி தொடங்கி வைத்தார்.

காரியாபட்டி பகுதியில் மழையை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. துார்ந்து கிடக்கும் ஆறுகளை தூர் வார விவசாயிகள் வலியுறுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கன் மலைத்தொடரின் வடக்கு முனையில் உற்பத்தியாகும் தெற்காறு, மதுரை மாவட்டத்தில் 60 கி.மீ. தூரம், விருதுநகர் மாவட்டத்தில் 16 கி.மீ. தூரம் பயணித்து பி.புதுப்பட்டியில் குண்டாற்றுடன் இணைகிறது. இதன் மூலம், விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர்வழிப் பாதையைச் சீரமைப்பதன் மூலம், மழைக்காலங்களில் நீர் தடையின்றிச் செல்லவும், மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்டம் உயர வழி ஏற்படும். நீர் நிலைகள் நிரம்பும் பட்சத்தில் 2 ஆயிரத்து 840 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

வேளாண் உற்பத்தி மேம்படும் என அறிந்து, டி.கடம்பங்குளத்தில் இருந்து பி.புதுப்பட்டி வரை தெற்காறு ஆற்றில் தூர்வார எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், எம்.என்.காயத்ரி அறக்கட்டளை, பிரதான் அமைப்புகள் முன்வந்தன. அத்துடன், நீர்வளத்துறை, தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், மக்கள் ஒருங்கிணைந்து மண்வளத்தைச் சீர்படுத்தி, பனை விதைகள் விதைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், விவசாயிகள், மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us