/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனவிலங்குகளால் ஏற்படும் சேதம் --நிவாரணம் நிர்ணயிப்பதில் குளறுபடி
/
வனவிலங்குகளால் ஏற்படும் சேதம் --நிவாரணம் நிர்ணயிப்பதில் குளறுபடி
வனவிலங்குகளால் ஏற்படும் சேதம் --நிவாரணம் நிர்ணயிப்பதில் குளறுபடி
வனவிலங்குகளால் ஏற்படும் சேதம் --நிவாரணம் நிர்ணயிப்பதில் குளறுபடி
ADDED : ஜூன் 13, 2025 02:44 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் இருந்து கீழ் இறங்கும் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு நிவாரணம் நிர்ணயிப்பதிலும் விவசாயிகளுக்கு வழங்குவதிலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, குரங்குகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உயிர் வாழ்கின்றன. மலையை ஒட்டிய பட்டா நிலங்களில் மா, தென்னை, பலா, கொய்யா, கரும்பு உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வனத்திலிருந்து வெளியேறும் விலங்குகள் சமீப காலமாக உணவு, நீர் உள்ளிட்டவற்றை தேடியும் சாகுபடி பயிர்களை தொடர்ந்து சேதம் விளைவித்து வருவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக யானைகள், குரங்குகளால் தென்னை, மா மரங்களும், காட்டுப்பன்றிகள் மான்கள் நெல், தென்னை, மா, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்துகின்றன.
யானைகள் தென்னங்கன்றுகளில் குருத்துகளை பிடுங்கி விடுவதால் பல ஆண்டுகள் பாதுகாத்து வளர்த்தும் மீட்க முடியாமல் முழுவதும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் வனவிலங்குகளால் சேதம் ஏற்படும் போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிவாரணம் பெற அறிவுறுத்த படுகின்றனர். இதற்கு வி.ஏ.ஓ., தோட்டக்கலைத் துறையினர் சான்று இணைத்து துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் ராஜபாளையம், சேத்துார், தேவதானம் பகுதியில் பல மாதங்களாக வனவிலங்குகளால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு கோரிக்கை வைத்தும் நிவாரண தொகை சேத மதிப்பில் பாதி அளவு கூட இல்லை என விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சஞ்சீவி ராஜா, சந்தையில் ஒட்டு ரக தென்னங்கன்று ஒன்று ரூ.600 விற்பனை ஆகும் நிலையில் நான்கு வருட தென்னை சேதமாகும் போது பராமரிப்பு செலவு உட்பட சுமார் 5 ஆயிரம் வரை மதிப்பு ஆகிறது. ஆனால் இதற்கான நிவாரணம் என்பது ரூ.200 வரையே தாமதமாக கிடைக்கிறது. எனவே வேளாண் தோட்டக்கலை துறை விவசாயிகள் அடங்கிய குழுவை அமைப்பதன் மூலம் உண்மையான சேத மதிப்பை கணக்கிட்டு சரியான நிவாரணம் கிடைக்க வழி ஏற்படும், என்றார்.