/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
/
துவக்கப்பள்ளி சுற்றுச்சுவர் சேதம்
ADDED : ஜூன் 15, 2025 05:48 AM

காரியாபட்டி : காரியாபட்டி அச்சங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச் சுவர் சேதம் அடைந்துள்ளது. சீரமைக்க பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அச்சங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகம் திறந்த நிலையில் இருந்ததால் ஆடு மாடுகள் அடைந்து அசுத்தமாக காணப்பட்டன. சுற்றுச் சுவர் எழுப்ப கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பள்ளியில் சுற்றுச் சுவர் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில் கட்டடத்தின் உறுதித் தன்மை குறைந்து, சேதமடைந்து வருகிறது. எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. மாணவர்கள் அப்பகுதியில் விளையாடுவதால் விபத்து அபாயம் உள்ளது.
ஆடி மாத காற்று பலமாக வீசக் கூடும். காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சுற்றுச் சுவர் விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. விபத்திற்கு முன், சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.