/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டடம்
/
சாத்துாரில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டடம்
ADDED : ஜன 30, 2025 10:39 PM

சாத்துார்; சாத்துாரில் சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.
சாத்துார் சுற்று கிராம மக்கள் விவசாயிகள் வந்து செல்லும் வேளாண்மை துறை அலுவலக கட்டடம் பெரியார் நகரில் உள்ளது. இந்தக் கட்டடம் 1988 கட்டப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் கட்டடத்தில் சன் சைடு ஸ்லாப்புகள் சேதமடைந்து இடிந்து கீழே விழுந்து வருகின்றன .மேலும் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து காணப்படுகின்றன. கூரை சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ ., ரகுராமன் ஆகியோர் சேதமடைந்த கட்டடத்தை பார்வையிட்டு புதிய கட்டடம் கட்டி தர நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.
தற்போது வரை புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிப்படை பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
தற்காலிகமாக வேளாண்மை துறை அலுவலகத்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காலியாகவுள்ள கட்டடத்திற்கு மாற்றவும் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகம் கட்டடவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்துார் பகுதி மக்கள் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.