/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான பேவர் பிளாக் ரோடு, மண்மேவிய வாறுகால் விருதுநகர் பவுண்டு தெரு மக்கள் அவதி
/
சேதமான பேவர் பிளாக் ரோடு, மண்மேவிய வாறுகால் விருதுநகர் பவுண்டு தெரு மக்கள் அவதி
சேதமான பேவர் பிளாக் ரோடு, மண்மேவிய வாறுகால் விருதுநகர் பவுண்டு தெரு மக்கள் அவதி
சேதமான பேவர் பிளாக் ரோடு, மண்மேவிய வாறுகால் விருதுநகர் பவுண்டு தெரு மக்கள் அவதி
ADDED : ஜூலை 17, 2025 11:43 PM

விருதுநகர்: சேதமான பேவர் பிளாக் ரோடு, மண்மேவி, சுத்தம் செய்யப்படாத வாறுகால், சிதிலமடையும் தடுப்புச்சுவர் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் 31வது வார்டு பவுண்டு தெரு மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் 31வது வார்டில் உள்ள பவுண்ட் தெருவில் ஒரு மெயின் ரோடு, 12 குறுக்குத் தெருக்கள் உள்ளது. இவற்றில் 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் பவுண்ட் தெருவின் மெயின், குறுக்குத் தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் ரோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த கற்கள் முறையாக அமைக்கப்படாததால் சில ஆண்டுகளில் ஒவ்வொன்றாக சிதிலமடைய துவங்கியது.
தற்போது பேவர் பிளாக் கற்கள் ரோடு முழுவதும் சிதிலமடைந்த பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால் சைக்கிள், டூவீலரில் வயதானவர்கள், குழந்தைகளை அழைத்து செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் சிலிண்டர் கொண்டு வந்த ஊழியர் கற்கள் இடறி விழுந்து காயமடைந்துள்ளார்.
மேலும் பேவர் பிளாக் கற்கள் பள்ளங்களாக மாறி இருப்பதால் மழை நீர் தேங்கி செல்ல முடியாமல் கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வாறுகால் அடைப்பை எடுப்பதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் பணியாளர்கள் முறையாக பணிகளை செய்யாததால் அடிக்கடி மண்மேவி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
வாறுகால் தடுப்புச்சுவர்கள் அமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால் தற்போது பெரும்பாலும் சிதிலமடைந்து கற்கள் வாறுகாலில் விழுந்து வருகிறது.
ரோடு புதிதாக வேண்டும்
சங்கரேஸ்வரி, குடும்பத் தலைவி: பவுண்ட் தெரு முழுவதும் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் ரோடு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. இந்த கற்களை அகற்றி விட்டு புதிதாக ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாறுகாலில் மண்ணை அகற்றுங்கள்
ராஜேஸ்வரி, குடும்பத் தலைவி: ெமயின் ரோடு, குறுக்குத்தெருக்களில் உள்ள வாறுகாலில் முறையாக மண், குப்பையை அகற்றாததால் அடிக்கடி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இப்பணிகளை முறையாக செய்ய வேண்டும்.
தடுப்புச் சுவர் வேண்டும்
ரேணுகா, குடும்பத் தலைவி: பவுண்டு தெருவில் வாறுகாலில் தடுப்புச்சுவர் சேதமாகி பல ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது ரோடு முழுவதும் வாறுகாலில் உள்ளே செல்லும் நிலை உள்ளது. புதிதாக வாறுகால் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.