/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காமராஜர் பூங்கா முன்புற ஓடையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்
/
காமராஜர் பூங்கா முன்புற ஓடையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்
காமராஜர் பூங்கா முன்புற ஓடையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்
காமராஜர் பூங்கா முன்புற ஓடையில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவர்
ADDED : டிச 22, 2025 06:00 AM

சிவகாசி: சிவகாசி காமராஜர் பூங்கா முன்புறமுள்ள ஓடையில் சேதம் அடைந்துள்ள தடுப்புச் சுவரால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி காமராஜர் பூங்கா முன்புறம் மழைநீர் கழிவுநீர் வெளியேறுவதற்கு ஓடை, வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை ஒட்டி செல்கின்ற வாறுகாலில் தடுப்புச் சுவர் இல்லை. பூங்கா முன்புறம் உள்ள ஓடையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் ஒரு ஆண்டுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனால் இதன் வழியே சென்று வருகின்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
இந்த ரோடு வளைவுப் பகுதியில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு டூவீலரில் வந்த பெண் வாறுகாலில் தவறி விழுந்து காயமடைந்தார். தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் வந்த வாலிபர்கள் ஓடையில் விழுந்து காயம் அடைந்தனர். இது போல் அடிக்கடி இப்பகுதி விபத்து ஏற்படுகின்றது. வாறுகாலில் தடுப்புச் சுவர் அமைப்பதோடு ஓடையிலும் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.