/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, குளியல் தொட்டி, உப்புத் தண்ணீர் சப்ளை
/
சேதமான ரோடு, குளியல் தொட்டி, உப்புத் தண்ணீர் சப்ளை
சேதமான ரோடு, குளியல் தொட்டி, உப்புத் தண்ணீர் சப்ளை
சேதமான ரோடு, குளியல் தொட்டி, உப்புத் தண்ணீர் சப்ளை
ADDED : மே 20, 2025 12:26 AM

காரியாபட்டி: சேதமான ரோடு, உப்புத் தண்ணீர் சப்ளை, சேதமான குளியல் தொட்டி, ஓடையில் தேங்கும் கழிவுநீர் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பணிக்குறிப்பு ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பணிக்குறிப்பு ஊராட்சியில் கல்லாம்பிரம்பு, முருகையாபுரம், சொக்கம்பட்டி ஊர்கள் உள்ளன. பணிக்குறிப்பில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பஸ் செல்கிறது. நிழற்குடை இல்லாததால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மழை, வெயிலுக்கு திறந்த வெளியில் நிற்கின்றனர். கண்மாய் கரையில் போடப்பட்ட சிமென்ட் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
சுகாதார வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. கண்மாய் கரையில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து உள்ளது. தடுப்புச் சுவர் இல்லாததால் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. ஊருக்குள் முக்கிய வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்காததால் சேறும், சகதியுமாக இருக்கிறது. சமுதாயக்கூடம் இல்லாததால் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த சிரமப்படுகின்றனர்.
முருகையாபுரத்தில் பள்ளி அருகில் குப்பைகளை கொட்டுகின்றனர். புதர் மண்டி துர்நாற்றம் வீசுகிறது. பெரும்பாலான வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் இல்லாததால் மழை நேரங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் நடமாட முடியவில்லை. அதிகம் மக்கள் கூடும் ஆலமரம் அருகே வளர்ந்துள்ள சம்பை செடிகளிலிருந்து தூசி காற்றில் பறப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கல்லாம்பிரம்பில் உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நாளடைவில் சுவை மாறி உப்பு தண்ணீராக உள்ளது. சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியவில்லை. குளியல் தொட்டி சேதம் அடைந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு, தேக்கி வைக்க முடியவில்லை. ஓடையில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
சொக்கம்பட்டியில் சமுதாயக்கூடம் இல்லாததால் விசேஷங்கள் நடத்த முடியவில்லை. முக்கிய வீதிகளில் பேவர் பிளாக் கிடையாது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்காததால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டி உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை செய்ய ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.