/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கே.மடத்துப்பட்டியில் சேதமான டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள்
/
கே.மடத்துப்பட்டியில் சேதமான டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள்
கே.மடத்துப்பட்டியில் சேதமான டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள்
கே.மடத்துப்பட்டியில் சேதமான டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள்
ADDED : ஆக 03, 2025 05:02 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் கே. மடத்துபட்டியில் ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
கே.மடத்துப்பட்டி ஆதிதிராவிடர் காலனி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்த டிரான்ஸ்பார்மரின் இரு மின்கம்பங்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அடி முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. பெரிய காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் நடமாடுகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உரசினாலே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ரோட்டோரத்தில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை கடந்து தான் மக்கள் சென்று வருகின்றனர். மக்கள் நடமாடும் போது டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.