/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தார்பாயால் மூடாமல் ஜல்லி கொண்டு செல்வதால் ஆபத்து: ரோட்டில் சிதறி செல்வதால் விபத்தில் சிக்க வாய்ப்பு

ADDED : மார் 23, 2024 05:03 AM

மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை உட்பட பல பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் பாறைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதில் ஜல்லிக்கற்களை சைஸ் வாரியாக உடைக்கும் கிரஷர்களும் அப்பகுதியில் ஏராளம்.
குவாரிகளிலிருந்து பாறைகளை வெட்டி லாரியில் ஏற்றி கிரஷர்க்கு கொண்டு செல்கின்றனர். லாரியின் அளவை தாண்டி அதிக அளவில் பாரங்களை ஏற்றுவதுடன், திறந்த நிலையில் கொண்டு செல்கின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்கள், மற்ற வாகனங்கள் விலகி செல்ல நேரிடும் போது, பாறை கற்கள் உருண்டு விழுந்து விபத்து நடக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் கிரஷரிலிருந்து ஜல்லிக் கற்களை வாகனங்களில் ஏற்றி செல்லும் போதும், தார்ப்பாய் கொண்டு மூடி செல்லாமல் திறந்த நிலையில் கொண்டு செல்கின்றனர். வாகனங்கள் குலுங்கி, ஆங்காங்கே ரோட்டில் ஜல்லிக் கற்களை சிதற விடுகின்றனர்.
டூவீலர்களில் வேகமாக வருபவர்கள் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களில் ஏற்றும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் வாகனங்களின் டயர்களும் பஞ்சராகி விடுகிறது. நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கின்றன.
மேலும் கிரஷர் துாள்களை தண்ணீரில் நனைத்து கொண்டு சென்றாலும் அதலிருந்தும் கல் துகள்கள் காற்றில் பறந்து பின்னால் டூவீலர்கள் வருபவர்கள் கண்ணில் விழுந்து விடுகிறது.
பல்வேறு விபத்து அபாயம் இருப்பதால், கனிமங்களை ஏற்றிச் செல்லும் போது வாகனங்களில் தார்ப்பாய் கொண்டு மூட வேண்டும் என்பது விதி. ஓட்டுனர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவ்வாறு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் நடக்காமல் பாதுாக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.