/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு
/
காரியாபட்டியில் திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு
காரியாபட்டியில் திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு
காரியாபட்டியில் திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு
ADDED : நவ 04, 2025 03:48 AM

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு உள்ளது. விபத்திற்கு முன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமானோர் பால் கறந்து விற்பனைக்கு கொண்டு வருவர். காலை, மாலை கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பால் கொண்டு வருபவர்களுடன் சிறுவர்கள் வருவது உண்டு.
இந்நிலையில் அங்கு திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு உள்ளது. அறியாமையில் சிறுவர்கள் விழுந்து விபத்து ஏற்படும், ஆபத்தான சூழ்நிலை உள்ளது. தரையை ஒட்டி இருப்பதால் இரவு நேரங்களில் இடறி விழுகின்றனர். மேலும் கால் இடறி உள்ளே சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உள்ளது.
பயன்பாடு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்பது அரசு விதி. இல்லாவிட்டால் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். அப்படி இருந்தும் ஒரு சில இடங்களில் மூடாமல் விட்டு விடுகின்றனர். சில நேரங்களில் குழந்தைகள் விளையாடும் போது, தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திறந்தவெளியில் ஆபத்தான ஆழ்துளை கிணறு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. விபத்திற்கு முன் அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

