ADDED : அக் 20, 2026 05:44 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் மருதுநகரை சேர்ந்தவர் கணேசன் 50, ரயில்வே ஸ்டேஷன் அருகே குடோனை வாடகைக்கு எடுத்து பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
பூஜைக்காக அவரது கடையை கழுவி விட்டு , வாகனங்களை ஸ்பிரேயர் மூலம் சுத்தம் செய்த போது எதிர்பாரா விதமாக ஸ்விட்ச் போர்டில் தண்ணீர் பட்டு துாக்கி வீசப்பட்டு பலியானார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி ,இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
