/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் டீன் நியமனம் தாமதம்மருத்துவமனை பணிகள் பாதிப்பு
/
விருதுநகரில் டீன் நியமனம் தாமதம்மருத்துவமனை பணிகள் பாதிப்பு
விருதுநகரில் டீன் நியமனம் தாமதம்மருத்துவமனை பணிகள் பாதிப்பு
விருதுநகரில் டீன் நியமனம் தாமதம்மருத்துவமனை பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 13, 2024 05:34 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு நிரந்தர டீன் நியமிப்பதில் தாமதம் நிலவுவதால் மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்படுகிறது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.
இதனால் நவ. 15 முதல் தற்போது வரை மூன்று மாதங்களாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வர் பதவி நிரப்பப்படவில்லை.
தற்போது டீன் பொறுப்பு பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் அவருடைய பணிச்சுமையால் மருத்துவமனைக்கு புதியதாக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதிலும், வாங்கிய உபகரணங்களை அந்தந்த துறைகளுக்கு வழங்குவதிலும், அந்த உபகரணங்களை செயல்படுத்துவதற்காக அறைகள் ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
மருத்துவமனை அலுவலக பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது. எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு நிரந்தர முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.