/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பணிகள் தாமதம், மேன்ஹோல்களால் விபத்து விருதுநகர் சின்னபள்ளிவாசல், ரயில்வே பீடர் ரோடு பகுதி மக்கள் அவதி

ADDED : மார் 17, 2024 11:59 PM

விருதுநகர் : குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டு பணிகள் நடக்காமல் கால தாமதம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் அவதி, புதியதாக ரயில்வே பீடர் ரோட்டில் கற்களில் இருந்து வரக்கூடிய துாசியால் சுவாச கோளாறு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் சின்னபள்ளிவாசல் பகுதி மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் 13 வது வார்டில் சின்ன பள்ளிவாசல், முத்து, ராமச்சந்திரன், எஸ்.எம்.ஜி., அல்லித்தெருக்கள், ரயில்வே பீடர் ரோடு ஆகியவை உள்ளன. சின்ன பள்ளிவாசல் தெருவிற்கு செல்லும் வழியில் தாமிரபரணி திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 10 நாள்களுக்கு முன்பு துவங்கியது.
இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டன. ஆனால் குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சின்ன பள்ளி வாசல் தெருவில் உள்ள ரோடு முன்னாள் முதல்வர் காமராஜ் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ரோடு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்து பள்ளங்களாக உள்ளது. இவ்வழியாக கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
ரயில்வே பீடர் ரோடு பணிகளுக்காக கற்கள் அமைக்கபட்ட நிலையில் வாகனங்கள் செல்லும் போது அதிகமான துாசி கிளம்புகிறது. மேன்ஹோல்கள் முறையாக அமைக்கப்படாததால் எளிதாக திறக்கக்கூடியதாக உள்ளது. இதன் வழியாக துார்நாற்றம் வெளியேறி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.