தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடுவதில் தாமதம்

தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடுவதில் தாமதம்

தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடுவதில் தாமதம்


ADDED : செப் 15, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் மார்ச் இறுதியில் முடிந்து 5 மாதங்களை கடந்தும் தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2019ல் 20வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. கடந்தாண்டு அக்டோபர் இறுதியில் 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது.

ஆனால் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சிகள் முடிக்க தாமதமானதால் பணிகள் துவங்கிய போது மெதுவாக நடந்து, அதன் பின் விரைவாக பணிகள் செய்யப்பட்டது. இதற்காக தனி அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டது.

வட மாநிலங்களில் கால்நடை டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் தாமதம் ஏற்பட்டு திட்டமிட்டபடி 2025 பிப்ரவரி இறுதியில் கணக்கெடுப்பை முடிக்க முடியாத நிலை உருவானது. இதனால் மார்ச் இறுதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. மாவட்டங்களுக்கு இடையே ஒப்பீடு அறிக்கை தயாரித்து எந்தெந்த மாவட்டங்கள் விரைவாக பணிகளை செய்து முடித்து வருகின்றனர் என வகைப்படுத்தப்பட்டது.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்து இறுதியாக விவரங்கள் சரிபார்ப்பு பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாநிலங்களில் இருந்து மத்திய அரசிடம் அனைத்து விவரங்களும் சமர்பிக்கப்பட்டது.

பணிகள் முடிந்து 5 மாதங்களை கடந்தும் இதுவரை தேசிய கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் மாநில அரசுகள் முந்தைய விவரங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தடுப்பூசி கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.

மேலும் பருவமழை விரைவில் துவங்கவுள்ளதால் கால்நடைகளை நோய்பரவலில் இருந்து காப்பதற்கான தற்காப்பு பணிகள் செய்ய கால்நடை கணக்கெடுப்பு விவரங்கள் அவசியமாகியுள்ளது. எனவே தேசிய கால்நடை கணக்கெடுப்பு விவரங்களை விரைந்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us