ADDED : நவ 25, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.
ராஜபாளையம் பொன்விழா மைதானம், சேத்தூர், கீழ ராஜகுலராமன் பத்திர பதிவு அலுவலகங்களில் இன்று (நவ.,25) காலை முதல் சொத்துக்களை சரி பார்க்கும் ஆதார் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பத்திரங்கள் பதிவு செய்ய முடியாததால் பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் அவதி அடைந்தனர்.
வழக்கமாக ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெறும் நிலையில் சர்வர் கோளாறு காரணமாக பதிவு செய்ய வந்த மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருப்பதற்கு பின் பத்திர பதிவிற்கு வந்தவர்கள் திருப்பிச் சென்றனர்.
