/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட பிளான்ட்டில் குடிநீர் வரலை குழாய் சீரமைக்க காலம் தாழ்த்துவதால் சிரமம்

ADDED : செப் 04, 2025 11:56 PM

விருதுநகர்:விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் ஜூன் மாதம் துவங்கப்பட்டது. தற்போது குழாய் சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விளையாட்டுத்துறையினர் மாற்று ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூன் மாதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வாரம் தோறும் விளையாட வரும் இளைஞர்கள், தினமும் காலை, மாலை நடைபயிற்சி செய்வோர், குறுவட்ட, வருவாய் மாவட்ட போட்டிகளில் பங்கேற்க வரும் மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் அரங்கம் வெளிப்புறத்தில் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக விளையாட்டு அரங்க குடிநீர் பிளான்டிற்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பணிகள் நடந்து வருகிறது. ஆனால் துண்டிக்கப்பட்ட பகுதியில் வடிகால் பணிகள் முழுமை அடைந்து விட்டது. இரண்டு வாரமாக முதல்வர் கோப்பை, குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்தை தவிர்க்க விளையாட்டுத்துறையினர் தற்காலிக குடிநீர் தொட்டி ஏற்படுத்தி தாகத்தை தீர்த்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு காலை, மாலை மோர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குடிநீர் பிளான்டும் செயல்பாட்டில் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மாணவர்கள் கருதுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைந்து இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மற்ற துறையின் பணியாக இருந்தாலும், பணி முடிந்த விவரத்தை தெரிவித்து விரைவில் இணைப்பு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.