/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமதமாக தொடங்கிய குடி மராமத்து பணிகளால் சிக்கல்: கரைகள் பலமிழந்து உடைப்பெடுக்கும் அபாயம்
/
தாமதமாக தொடங்கிய குடி மராமத்து பணிகளால் சிக்கல்: கரைகள் பலமிழந்து உடைப்பெடுக்கும் அபாயம்
தாமதமாக தொடங்கிய குடி மராமத்து பணிகளால் சிக்கல்: கரைகள் பலமிழந்து உடைப்பெடுக்கும் அபாயம்
தாமதமாக தொடங்கிய குடி மராமத்து பணிகளால் சிக்கல்: கரைகள் பலமிழந்து உடைப்பெடுக்கும் அபாயம்
ADDED : அக் 25, 2025 03:50 AM

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை ஆழப்படுத்தியும், அகலப்படுத்துவதுடன், கண்மாய் மடைகளை சீரமைப்பு, ஆக்கிரமிப்பு கருவேல மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி சீராக்குவது குடி மராமத்து பணித்திட்டம்.
மதகுகளை சீரமைப்பதால் அத்தியாவசிய, அவசர காலங்களில் மதகுகளை திறந்து மூடுவதற்கு ஏதுவாகும்.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை , உள்ளாட்சித் துறை நிர்வாகிகளுக்கு உள்ள கண்மாய் , குளங்களில் குடிமராமத்து பணிகள் நடை பெற்று வருகிறது.
செப். இறுதிக்குள் பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய பின்னரும் பல கண்மாய்களில் பணிகள் முடிவடையாமல் தாமதம் ஏற்பட்டது.
இதற்கு காரணம் பணிகள் காலதாமதமாக தொடங்கியதே ஆகும். பருவ மழைக்கு ஒரு மாதம் முன்பே பணிகளை முடித்து அதன் பின் ஏற்படும் சிக்கல்களை சரி செய்தால் மட்டுமே பணிகள் முடிவடையும்.
இதற்கு மாறாக ராஜபாளையம் அருகே ஆதியூர் கண்மாய் காலதாமத பணி ஒதுக்கீட்டால் கரைகள் பலம் இழந்ததுடன் பிரதான மதகு அருகே உடைப்பு ஏற்படாமல் இருக்க தார்ப்பாய் வைத்து மூடி சமாளித்தனர். இதேபோல் பிரண்டை குளம், கடம்பன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடி மராமத்து பணிகள் நடந்து தற்போது பருவ மழையினால் கண்மாய் கரைகள் வேகமாக கரைந்து வருகின்றன.
குறிப்பிட்ட இடைவெளிக்கு முன் வேலை தொடங்கி பணிகள் முடித்திருந்தால் மழையினால் கரைகள் கரைந்தாலும் தொடர்ந்து பராமரிப்பு செய்து பலப்படுத்தி இருக்க முடியும்.
கடந்த காலங்களில் இது போன்ற நடைமுறை இருந்த நிலையில் தாமதித்த பணிகளால் மீதமுள்ள பணிகளை முடிக்க முடியாமல் மக்கள் வரிப்பணம் வீணாவதுடன், தரமும் கேள்விக்குறியாகி வருவதை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

